சிவகார்த்திகேயன், ஜீவாவைத் தொடர்ந்து ஜெயம் ரவி!

ரெமோ, கவலை வேண்டாம் படங்களைத் தொடர்ந்து ‘போகன்’ படமும் ஆயுதபூஜை விடுமுறையை குறிவைத்துள்ளது

செய்திகள் 27-Jul-2016 2:59 PM IST Chandru கருத்துக்கள்

கபாலி வெளியாகிவிட்டதால் இனி மத்த படங்கள் ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையும் தைரியமாக ரிலீஸாகத் தொடங்கிவிடும். பெரிய பட்ஜெட் படங்களைப் பொறுத்தவரை அவர்களின் டார்கெட் விடுமுறை தினம் என்பதால், அடுத்த வரவிருக்கும் சுதந்திர தின விடுமுறையை குறிவைத்து ஒரு சில படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன. அதனைத் தொடர்ந்து முக்கிய படங்கள் அனைத்தும் குறி வைப்பது ஆயுதபூஜை விடுமுறை நாட்களைத்தான். வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என 5 நாட்கள் வசூலைக் குவிக்க முடியும் என்பதால் அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸைக் குறிவைக்க ஆரம்பித்துள்ளன சில படங்கள். இதில் முதல் ஆளாக துண்டைப் போட்டது சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’. போஸ்ட் புரொடக்ஷன் பணிகளே இன்னும் முடிவடையாத நிலையில், இரண்டு மாதத்திற்கு முன்பே ‘பக்கா’வாக தேதியை பதிவு செய்துள்ளது ரெமோ.

சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து ஜீவாவும் அதே நாளில்தான் களமிறங்குகிறார். ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில், டீகே இயக்க, ஜீவா, காஜல் அகர்வால் நடிக்கும் ‘கவலை வேண்டாம்’ படமும் அக்டோபர் 7ஐ தங்களின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியாக அறிவித்துள்ளது. இப்போது லேட்டஸ்ட்டாக இந்தப் பட்டியலில் ஜெயரம் ரவியும் இணைந்திருப்பதாக விநியோகஸ்தர் தரப்பிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.

‘ரோமியே’ கூட்டணியான இயக்குனர் லக்ஷ்மண், நடிகர் ஜெயரம் ரவி, நடிகை ஹன்சிகா மோத்வானி, இசையமைப்பாளர் டி.இமான் ஆகியோருடன் ‘போகன்’ படத்தில் அர்விந்த் சாமியும் இணைந்திருக்கிறார். ‘தனி ஒருவன்’ படத்திற்குப் பிறகு இப்படத்திலும் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாகவே நடித்திருக்கிறார். இதனால் ‘போகன்’ படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில், படத்தை ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 7ஆம் தேதி வெளியிடுவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றனவாம். இதனால் சிவகார்த்திகேயன், ஜீவாவைத் தொடர்ந்து ஜெயம் ரவியும் ஆயுத பூஜை ரிலீஸில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;