‘காக்கா முட்டை’ மூலம் தனது திரையுலக அறிமுகத்தை அழுத்தமாக பதிவு செய்தவர் இயக்குனர் மணிகண்டன். இப்படம் தேசிய விருதை வென்றதோடு, லாபகரமான படமாகவும் அமைந்தது கூடுதல் சிறப்பு. இப்போது அவரின் அடுத்த படமான ‘குற்றமே தண்டனை’ படமும் ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படமும் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. அதோடு சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ரித்திகா சிங் நடிக்கும் ‘ஆண்டவன் கட்டளை’ படமும் முந்தைய படங்களைப்போலவே விருது மற்றும் திரைப்பட விழாக்களுக்காக எடுக்கப்படுகிறதா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அதனை மறுத்துள்ளார் மணிகண்டன். போலி பாஸ்போர்ட் கதைக்களத்தை பின்னணியாகக் கொண்ட ‘ஆண்டவன் கட்டளை’ ஒரு வித்தியாசமான கமர்ஷியல் படமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், ரமா, தர்ஷன்...
இந்த வாரம் சீதக்காதி, மாரி-2, கனா, அடங்க மறு, சிலுக்குவார்பட்டி சிங்கம், கே.ஜி.எஃப் ஆகிய 6...
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து தயாரித்துள்ள படம் ‘கனா’. இந்த படத்தை...