சால்ட் & பெப்பர் தோற்றத்தில் துப்பறியும் நிபுணராக அர்ஜுன்!

வேகமாக வளர்ந்து வரும் அர்ஜுனின் நிபுணன்!

செய்திகள் 27-Jul-2016 11:02 AM IST VRC கருத்துக்கள்

அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் அர்ஜுன், பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய கேரக்டர்களிக்ல் நடிக்கும் ‘நிபுணன்’ படத்தின் படப்பிடிப்பு பெங்களூரை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவிருக்கிறது. இப்படம் குறித்து இயக்குனர் அருண் வைத்தியநாதன் கூறும்போது,

‘‘இப்படத்தில் அர்ஜுன் சால்ட் & பெப்பர் தோற்றத்தில் ரஞ்சித் காளிதாஸ் என்ற கண்டிப்பு மிக்க புலனாய்வு அதிகாரியாக நடிக்கிறார். இவருடன் சக அதிகாரிகளாக ஜோசஃப் என்ற கதாபாத்திரத்தில் பிரசன்னாவும், வந்தனா என்ற கேரக்டரில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கிறார்கள். ‘லூசியா’ மற்றும் ‘கோதிபன்னா சாதாரண மைக்கட்டு’ ஆகிய கன்னட படங்களில் நடித்த ஸ்ருதி ஹரிஹரன் அர்ஜுனுக்கு மனைவியாக நடிக்கிறார். இவர்களுடன் சுஹாசினி மணிரத்னம், வைபவ், சுமன் ஆகியோரும் நடிக்கும் இப்படம் கன்னடத்தில் ‘விஸ்மயா’ என்ற பெயரிலும் வெளியாகவிருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளுடனும் பரபரப்பான த்ரில்லர் காட்சிகளுடனும் உருவாகி வரும் இப்படம் ரசிகர்களுக்கு மாறுபட்ட ஒரு அனுபவத்தை தரும் என்ற நம்பிக்கையுடன் இப்படத்தை இயக்கி வருகிறேன்’’ என்றார்.

’ஃபேஷன் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் சார்பில் உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராம் ஆகியோருடன் அருண் வைத்தியநாதனும் தயாரிப்பில் இணைந்துள்ள் இப்படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்ப்திவு செய்கிறார். எஸ்.நவீன் இசை அமைக்கிறார். சதீஷ் சூர்யா படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்கத்தை ஆறுசாமி கவனிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;