ஹிந்து, முஸ்லிம் காதல் கதைக்கு ‘யு’ சர்டிஃபிக்கெட்!

மீண்டும் ஒரு காதல் கதை சென்சார் ரிசல்ட்?

செய்திகள் 27-Jul-2016 10:07 AM IST VRC கருத்துக்கள்

மலையாள ‘தட்டத்தின் மறையத்து’ படத்தின் ரீ-மேக் ஆக உருவாகியிருக்கும் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ திரைப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இதனையொட்டி இப்படம் சமீபத்தில் சென்சார் குழு உறுப்பினர்களின் பார்வைக்கு சென்றது. ‘மீண்டும் ஒரு காதல் கதை’யை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படத்தில் எந்த கட்டும் கொடுக்காமல் அனைவரும் பாரக்க கூடிய படம் என்பதற்கான ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். இப்படம் 144 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் அமைந்துள்ளது! முஸ்லிம், ஹிந்து காதலை மையமாக வைத்து மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இப்படத்தில் அறிமுக நடிகர் வால்டர் பிலிப்ஸ் கதாநாயகனாக நடிக்க, மலையாளத்தில் கதாநாயகியாக நடித்த இஷா தல்வரே தமிழிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். SVD ஜெயச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். ஏற்கெனவே பிரதாப் போத்தன் இயக்கத்தில் இதே பெயரில் ஒரு படம் தமிழில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மீண்டும் ஒரு காதல் கதை - டிரைலர்


;