கமல்ஹாசன் நடிக்கும் ‘சபாஷ் நாயுடு’ படக்குழுவில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அமெரிக்காவில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே இயக்குனர் ராஜீவ் குமாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அப்படத்தை இயக்கும் பொறுப்பை கமலே ஏற்றுக்கொண்டு இயக்கி வந்தார். இந்நிலையில் இப்படத்தில் எடிட்டராக பணிபுரிந்து வந்த ஜேம்ஸ் ஜோசஃபின் மனைவிக்கு கேரளாவில் விபத்து ஏற்பட்டதால் அவர் அமெரிக்க படப்பிடிப்பிலிருந்து கிளம்பி கேரளா செல்ல வேண்டி இருந்ததால் படப்பிடிப்பு நடக்கும்போதே நடந்து வந்த இப்படத்தின் எடிட்டிங் பணிகள் பாதிக்கப்பட்டன. இருந்தாலும் திட்டமிட்டபடி அமெரிக்கா ஷெட்யூலை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் கமல்ஹாசன். அப்படி சென்னை வந்த நேரத்தில் தான் கமல்ஹாசனுக்கு தனது அலுவலக மாடிப்படியில் தவறி விழுந்து கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசன் இன்னும் ஒரு சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இது ஒரு புறமிருக்க, ‘சாபாஷ் நாயுடு’வில் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ஜெய கிருஷ்ணாவின் பணிகளில் திருப்தி அடையாத கமல்ஹாசன் ‘சபாஷ் நாயுடு’வின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு வேறு ஒரு ஒளிப்பதிவாளரை அமர்த்த முடிவு செய்துள்ளாராம். இதுபோன்ற பெரும் மாற்றங்களால் கமல்ஹாசனின் ‘சபாஷ் நாயுடு’ வெளிவர கொஞ்சம் காலதாமதமாகும் என்று கூறப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிக்கும் படம் ‘இந்தியன்-2’. இந்த படத்தின்...
மாநகரம், கைதி ஆகிய படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி...
‘2.0’ படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கி வரும் படம் ‘இந்தியன்-2’. கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா...