சல்மான் கான் நடிப்பில் இம்மாதம் 6-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான ‘சுல்தான்’ குறுகிய நாட்களிலேயே 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் மாபெரும் வெற்றிய தொடர்ந்து சல்மான் கான் ‘பஜ்ரங்கி பைஜான்’ படத்தை இயக்கிய கபீர் கான் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவிருக்கிறார். சல்மான் கானும், கபீர் கானும் மீண்டும் இணையும் இப்படத்திற்கு ‘ட்யூப் லைட்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். இப்படத்தின் வேலைகள் இம்மாதம் 28-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. ‘ஏக்தா டைகர்’, ‘பஜ்ரங்கி பைஜான்’ ஆகிய படங்களில் இணைந்த இயக்குனர் கபீர்கானும், சல்மான் கானும் மூன்றாவது முறையாக இணையும் படம் ‘ட்யூப் லைட்’ என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீநகர் ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமாவில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாகுதலில் 40-க்கும் மேற்பட்ட...
அனுஷ்கா சர்மா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஹிந்தி படம் ‘பாரி’. சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் ரகப்படமான...
இந்திய சினிமா சரித்திரத்திலேயே வசூலில் பெரும் சாதனை படைத்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம்...