விஜய் இயக்கத்தில் பிரபு தேவா, தமன்னா ஜோடியாக நடிக்கும் படம் ‘தேவி’. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவிருக்கிறது. இறுதிகட்ட வேலைகள் நடந்து வரும் ‘தேவி’யை வருகிற செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். பிரபு தேவாவின் ‘பிரபு தேவா ஸ்டுடியோஸ்’ நிறுவன தயாரிப்பில் உருவாகி வரும் ‘தேவி’யின் விநியோக உரிமையை ஆரா சினிமாஸ் நிறுவனம் கைபற்றியிருக்கிறது. சமீபகாலமாக வரிசையாக திரைப்படங்களை வெளியிட்டு வரும் இந்நிறுவனம் ‘தேவி’யை அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளதாம்! ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு பிரபு தேவா நடிக்கும் படம் இது என்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
‘ஆரண்யகாண்டம்’ படத்தை தொடர்ந்து தியாகராஜன் குமார ராஜா இயக்கியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய்...
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், சாயிஷா, ஆர்யா, பொம்மன் இரானி, சமுத்திரக்கனி ஆகியோர்...
அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் ‘விஜய்-63’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்...