டாக்டர் ராஜசேகர் தங்கை மகன் இயக்கி நடிக்கும் படம்!

டெக்னாலஜி வளர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகளைச் சொல்லும் ‘88’

செய்திகள் 26-Jul-2016 2:00 PM IST VRC கருத்துக்கள்

டாக்டர் ராஜசேகரின் தங்கை மகன் மதன் நடிக்கும் படத்திற்கு ‘88’ என்று பெயரிட்டுள்ளனர். ‘ஜே.கே.மூவி மேக்கர்ஸ்’ என்ற நட நிறுவனம் சார்பாக ஏ.ஜெயகுமார் தயாரிக்கும் இப்படத்தில் உபாஷ்னா ராய் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் 2015-ல் மிஸ் இந்தியாவாக தேர்வானவர்! இவர்களுடன் ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, மீரா கிருஷ்ணன், பவர் ஸ்டார் சீனிவாசன், சாம்ஸ், அப்புக்குட்டி சாப்ளின் பாலு, சிசர் மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் மதனே இப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவுக்கு வெற்றி, இசைக்கு தயாரத்னம் என கூட்டணி அமைத்து இயக்கி வரும் ’88’ படம் குறித்து மதன் கூறும்போது, ‘‘இன்று டெக்னாலஜி அபரிமிதமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. அந்த அபார வளர்ச்சி அபாய வளர்ச்சியாக்வும் கருதப்பட்டு கொண்டிருக்கிறது. டெக்னாலஜி வளர்ச்சி எப்படி நம் சமூகத்தில் கலாச்சார சீர்கேட்டை உருவாக்குகிறாது என்பது தான் இப்படத்தின் ஒரு வரி கதை. சில விஷயங்கள் மற்றவர்களுக்கு தெரியாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். மறைத்து வைக்க வேண்டிய விஷயங்கள் பகிரங்கப்படுத்தப்படும்போது ஏற்படும் பிரச்சனைகளை இப்படத்தில் சொல்ல வருகிறோம்’’ என்றார்.
இறுதிகட்ட வேலைகளில் இருந்து வரும் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விடுடா பொண்ணுங்களே வேணாம் வீடியோ பாடல்


;