11 நாடுகளில் படமாகும் சுந்தர்.சியின் பிரம்மாண்ட படம்?

ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படைப்பாக உருவாகும் சுந்தர்.சியின் படத்திற்காக 11 நாடுகளில் படப்பிடிப்பு நடத்தவிருக்கிறார்களாம்

செய்திகள் 26-Jul-2016 12:03 PM IST Chandru கருத்துக்கள்

எந்திரன், பாகுபாலி, ரா ஒன் (பாலிவுட்) போன்ற படங்களே இந்திய சினிமாக்களில் அதிக பொருட்செலவில் தயாரான படங்கள். அதேபோல் தற்போது உருவாகிவரும் ‘எந்திரன் 2’, ‘பாகுபலி 2’ போன்றவை முதல் பாகத்தைவிட மிக அதிக பொருட்செலவில் உருவாகிவருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மேற்கண்ட படங்கள் அனைத்தையும்விட அதிக பொருட்செலவில் சுந்தர்.சி ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்ற செய்தி அனைவரும் அறிந்ததுதான். ‘சங்கமித்ரா’ என பெயரிடப்பட்டிருப்பதாகக் கூறப்படும் இப்படம் ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமாகும்.

ஏ.ஆர்.ரஹ்மான் (இசை), சுதீப் சட்டர்ஜி (ஒளிப்பதிவு), சாபுசிரில் (கலை), கனல்கண்ணன் (சண்டை) ஆகியோர் இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ‘சங்கமித்ரா’வில் நாயகனாக நடிப்பதற்காக தென்னிந்திய முன்னணி நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஸ்கிரிப்ட் வேலைகள் முடிவடைந்து ‘கான்சப்ட் டிசைனிங்’ வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறதாம். இப்படத்தின் படப்பிடிப்பை இந்தியா, அமெரிக்கா, டென்மார்க், உக்ரைன், இரான் உட்பட உலகம் முழுவதும் 11 நாடுகளில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம். இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நட்பே துணை ட்ரைலர்


;