கருணாகரன் நடிக்கும் ‘பொது நலன் கருதி’

பூஜையுடன் துவங்கியது பொது நலன் கருதி!

செய்திகள் 26-Jul-2016 11:04 AM IST VRC கருத்துக்கள்

‘தில்லுக்கு துட்டு’ படத்தை இயக்கிய ராம் பாலாவிடம் உதவியாளராக பணிபுரிந்த சீயோன் இயக்கும் படம் ‘பொது நலன் கருதி’. கருணாகரன் ‘தங்கமகன்’ படப் புகழ் ஆதித் அருண், ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ புகழ் சந்தோஷ், மலையாள நடிகை அனு சித்தாரா மற்றும் லீஷா இப்படத்தின் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் யோக் ஜாப்பீ, அஷ்மிதா, இமான் அண்ணாச்சி, முத்துராமன், ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி ‘சுப்பிரமணியபுரம்’ ராஜா ஆகியோரும் நடிக்கிறார்கள். ‘பொது நலன் கருதி’ படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது. மூன்று வெவ்வேறு பிரிவுகளை சேரந்த இளைஞர்கள் தங்களின் பிழைப்புக்காக சென்னை வருகின்றனர். அவர்கள் தங்களின் வாழ்க்கையில் வெற்றி கண்டார்களா இல்லையா என்பது தான் இப்படத்தின் ஒரு வரி கதையாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கிலி புங்கிலி கதவ தொற - டிரைலர்


;