அடுத்த வாரத்தில் ‘எந்திரன் 2’விற்கு திரும்பும் சூப்பர்ஸ்டார்!

அமெரிக்காவில் ஓய்விலிருந்த ரஜினி, அடுத்த வாரம் ‘எந்திரன் 2’ படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னை திரும்பியுள்ளார்

செய்திகள் 26-Jul-2016 10:50 AM IST Chandru கருத்துக்கள்

ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ‘எந்திரன்’ இரண்டாம் பாகமான ‘2.0’ படத்தின் முதல் ஷெட்யூல் பூந்தமல்லி சாலையில் உள்ள ஈவிபி தீம் பார்க் ஏரியாவில் போடப்பட்டிருந்த மிகப்பெரிய செட் ஒன்றில் படமாக்கப்பட்டது. அந்த செட்டில் இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டியிருந்ததால், அதை பிரிக்காமல் இன்னமும் பாதுகாத்து வருகின்றனர். இப்போது அதே செட்டில் அடுத்த வாரம் மீண்டும் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. ‘கபாலி’யின் வேலைகளை முடித்துவிட்டு அமெரிக்காவில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஓய்விலிருந்து வந்த ரஜினி தற்போது சென்னை திரும்பிவிட்டார். அடுத்த வாரம் துவங்கவிருக்கும் ‘2.0’ படப்பிடிப்பில் முழு உற்சாகத்துடன் அவர் பங்கேற்விருப்பதாகத் தெரிகிறது. இடையில் ரஜினி இல்லாத நேரத்தில் அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உட்பட மற்ற முக்கிய நட்சத்திரங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் விறுவிறுப்பாக படமாக்கிவிட்டார் ஷங்கர். இந்த வருடத்திற்குள் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் களமிறங்கத் திட்டமிட்டிருக்கிறதாம் ‘2.0’ குழு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;