யுவன் சங்கர் ராஜா இசையில் ரம்யா நம்பீசன்!

இறுதிகட்டத்தில் செம போத ஆகாத!

செய்திகள் 26-Jul-2016 10:36 AM IST VRC கருத்துக்கள்

நடிகர் அதர்வா தயாரிப்பாளராக களமிறங்கி தயாரித்து வரும் படம் ‘செம போத ஆகாத’. ‘கிக் ஆஸ் என்டர்டெயின்மென்ட்’ என பெயரிடப்பட்டிருக்கும் தனது நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகி இப்படத்தை ‘பாணா காத்தாடி’ படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார். அதர்வா கதாநாயகனாக நடித்து தயாரிக்கும் இப்படத்தில் அனைகா, மேற்கு வங்க நடிகை மிஸ்தி சக்ரபோர்த்தி என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாம்! யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்திற்காக இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் எழுதிய ஒரு பாடலை நடிகை ரம்யா நம்பீசனை பாட, அதனை சமீத்தில் பதிவு செய்துள்ளனர். இப்பாடல் பதிவுடன் இப்படத்தின் அனைத்து பாடல்களின் பதிவும் முடிந்து விட்டதாம்! இப்படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம் அதர்வா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;