200 கோடியைத் தாண்டியதா ‘கபாலி’ வசூல்?

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கபாலி’ திரைப்படம் முதல்வார இறுதியில் உலகளவிலான வசூலில் 200 கோடியைத் தாண்டியிருப்பதாகத் தகவல்

செய்திகள் 26-Jul-2016 10:28 AM IST Chandru கருத்துக்கள்

சூப்பர்ஸ்டார் படம் வசூலில் சாதனை படைக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், இத்தனை எதிர்மறையான விமர்சனங்களுக்கிடையேயும் இவ்வளவு பெரிய வசூலைக் குவிக்கும் என எவருமே எதிர்பார்க்கவில்லை. முதல் நாளிலேயே உலகளவிலான வசூலில் 100 கோடியைத் தாண்டியதாக கூறப்பட்ட ‘கபாலி’யின் முதல் வார வசூல் (பிரீமியர் + 3 நாள்) மட்டுமே 220 கோடியை நெருங்கியிருப்பதாக தயாரிப்பு தரப்புக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்திருக்கிறது. இதில் இந்தியாவில் மட்டுமே கிட்டத்தட்ட 130 கோடியையும், வெளிநாடுகளில் 87 கோடியையும் வசூல் செய்திருப்பதாகத் தெரிகிறது.

கபாலியின் மொத்த வசூல் நிலவரம் & தோராய மதிப்பீடு (வெள்ளி, சனி, ஞாயிறு)

தமிழ்நாடு - 49.3 கோடி
ஆந்திரா, தெலுங்கானா - 32.7 கோடி
கர்நாடகா - 19.2 கோடி
கேரளா - 10.4 கோடி
வடஇந்தியா - 23.2 கோடி
வெளிநாடு - 87.5 கோடி

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;