‘ஜோக்கர்’ படத்திற்கு கிரீன் சிக்னல் கொடுத்த சென்சார் போர்டு!

‘குக்கூ’ படத்தைத் தொடர்ந்து ராஜு முருகனின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜோக்கர்’ படத்திற்கு சென்சாரில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது

செய்திகள் 25-Jul-2016 5:09 PM IST Chandru கருத்துக்கள்

‘சகுனி’ படத்தின் மூலம் தயாரிப்புத் துறையில் களமிறங்கிய ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் கார்த்தி நடிப்பில் ‘காஷ்மோரா’ படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. அதோடு அறிமுக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் ‘அருவி’ என்ற சமூக அக்கறை கொண்ட படத்தையும், ‘குக்கூ’ ராஜுமுருகன் இயக்கத்தில் ‘ஜோக்கர்’ என்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன்கூடிய விழிப்புணர்வு படத்தையும் தயாரித்து வருகிறது இந்நிறுவனம்.

‘ஜிகர்தண்டா’ புகழ் குரு சோமசுந்தரம் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தின் அனைத்துகட்ட வேலைகளும் முடிவடைந்து படம் விரைவில் ரிலீஸாகத் தயாராகி வருகிறது. ஷான் ரோல்டன் இசையமைப்பில் உருவாகி வெளிவந்த ‘ஜோக்கர்’ படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில், அரசியல் மற்றும் விழிப்புணர்வு வசனங்களை உள்ளடக்கிய இப்படத்தின் சென்சார் கடந்த வாரம் நடைபெற்றது. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கி, அனைவரும் பார்க்க அனுமதி அளித்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;