அஜித்தின் ‘சிட்டிசனு’க்குப் பிறகு சிம்ஹாவின் ‘வல்லவனுக்கும் வல்லவன்’

15 வருடங்களுக்குப் பிறகு ‘சிட்டிசன்’ படமாக்கப்பட்ட பகுதியில் ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படப்பிடிப்பு நடைபெற்றது

செய்திகள் 25-Jul-2016 4:53 PM IST Chandru கருத்துக்கள்

‘கோ 2’ படத்தின் மூலம் வணிகரீதியிலான வெற்றியைச் சுவைத்த பாபி சிம்ஹாவிற்கு, சமீபத்தில் வெளிவந்த ‘இறைவி’ திரைப்படம் விமர்சனரீதியாக நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ‘வல்லவனுக்கும் வல்லவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார் சிம்ஹா. ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அசால்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் பாபி சிம்ஹா தயாரித்து, கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்கி வருகிறார் அறிமுக இயக்குனர் விஜய் தேசிங்கு. ‘நெடுஞ்சாலை' புகழ் ஷிவதா மற்றும் பூஜா தேவரியா, கருணாகரன் ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் டீசரானது, வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி அன்று வெளியாகிறது.

'வல்லவனுக்கும் வல்லவன்' படத்தில் பாபி சிம்ஹா பதினொன்று கெட்டப்பில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி, சுமார் பதினைந்து வருடம் கழித்து சென்னையை அடுத்து உள்ள பழவேற்காடு ஏரியில் படமாக்கப்பட்டிருக்கிறது இப்படம். நடிகர் அஜித்குமார் நடித்த 'சிட்டிசன்' திரைப்படத்தின் படப்பிடிப்புதான் இங்கு கடைசியாக படமாக்கப்பட்ட தமிழ் படம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நேர்கொண்ட பார்வை டிரைலர்


;