3 நாளில் 50 கோடி : ‘கபாலி’யின் தமிழ்நாடு பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கபாலி’ திரைப்படம் முதல் 3 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே 50 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாம்

செய்திகள் 25-Jul-2016 11:04 AM IST Chandru கருத்துக்கள்

பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த சூப்பர்ஸ்டாரின் ‘கபாலி’ திரைப்படத்திற்கு விமர்சனங்களும், ரசிகர்களின் கருத்துக்களும் இருவேறாக இருந்தபோதும், ‘வசூலில் எப்போதும் தான் ஒரு கிங்’ என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ரஜினிகாந்த். உலகளவில் 8000த்திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியிருப்பதாகக் கூறப்படும் ‘கபாலி’யின் முதல் நாள் உலக வசூல் 100 கோடியைத் தாண்டியிருப்பதாக செய்திகள் வந்தன. தற்போது முதல் 3 நாட்களுக்கான தமிழக பாக்ஸ் ஆபீஸ் நிலவரமும் தெரிய வந்துள்ளன.

தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் 20.5 கோடி ரூபாய் வசூலைக் குவித்த கபாலி, சனிக்கிழமை 15.8 கோடி ரூபாய் வசூலையும், ஞாயிற்றுக்கிழமை 13.3 கோடி ரூபாய் வசூலையும் குவித்துள்ளதாக விநியோகஸ்தர் தரப்பிலிருந்து செய்திகள் கிடைத்துள்ளன. இதுவரை எந்த தென்னிந்திய சினிமாவும் முதல் 3 நாட்களிலேயே சொந்த மாநிலத்தில் மட்டும் 50 கோடி ரூபாய் (Gross) வசூலைப் பெற்றது கிடையாது. இதில் சென்னை சிட்டியில் மட்டுமே கிட்டத்தட்ட 5 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாம் ‘கபாலி’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;