30 வருடங்களுக்கும் மேலாக தமிழ்சினிமாவில் இயக்குனராக வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கும் மணிரத்னம் மொத்தமே 40க்கும் உட்பட்ட படங்களையே இயக்கியுள்ளார். ஆனால், அவரின் பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்கள் என்பதுதான் அவரின் இமாலய சாதனை. அதோடு, அவை மற்ற மொழிகளிலும் ரீமேக்கிற்காக போட்டி போட்டு வாங்கப்பட்டு வருபவை. அந்தவகையில், 1988ல் அவர் இயக்கத்தில் கார்த்திக், பிரபு நடித்து வெளிவந்த சூப்பர்ஹிட் படமான ‘அக்னி நட்சத்திரம்’ படத்தை தமிழிலேயே ரீமேக் செய்ய நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்தன. கார்த்திக் நடித்த கேரக்டரில் அவரது மகன் கௌதம் கார்த்திக்கையும், பிரபுவுக்குப் பதிலாக அவரின் மகன் விக்ரம் பிரபுவையும் நடிக்க வைத்து அப்படத்தை ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்துவந்தன.
இந்நிலையில், ‘அக்னி நட்சத்திரம்’ படத்தின் பாலிவுட் ரீமேக்கை, மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து இயக்குனராக மாறிய பிஜோய் நம்பியார் இயக்கவிருக்கிறார். இதில் பிரபு கேரக்டரில் நடிப்பதற்கு ஹர்ஷவர்தன் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இப்போது, கார்த்திக் கேரக்டரில் நடிப்பதற்காக தனுஷ் உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. ஏற்கெனவே, ரான்ஜ்னா, ஷமிதாப் படங்களின் மூலம் பாலிவுட் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த தனுஷ் இப்படத்திலும் பெரிய அளவில் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில் வெளிவந்த ‘அனேகன்’ படத்தில் கார்த்திக்குடன் இணைந்து நடித்துள்ள தனுஷ், அப்படத்தின் ஒரு காட்சியில் கார்த்திக்கின் மாடுலேஷனில் மிமிக்ரி செய்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’....
இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராகவும், ‘அஞ்சனவித்தை’ என்ற குறும் படத்தை இயக்கி, தமிழக அரசின்...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள...