ஓய்வெடுக்கும்படி கமலுக்கு அறிவுரை வழங்கிய டாக்டர்கள்!

சமீபத்தில் காலில் அடிபட்ட நடிகர் கமல்ஹாசன், ஒரு மாத காலமாவது ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவிறுத்தியுள்ளனர்

செய்திகள் 25-Jul-2016 10:31 AM IST Chandru கருத்துக்கள்

‘சபாஷ் நாயுடு’ படத்தின் அமெரிக்க படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் கமல்ஹாசனின் காலில் அடிபட்டது. தன் அலுவலக மாடிப்படியிலிருந்து விழுந்ததால் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கமல். பயப்படும்படி பெரிதாக எதுவும் இல்லையென்றாலும், கமல் உடல்நலனின் மீது கொண்ட அக்கறை காரணமாக சில நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நடிகர் கமலை குறைந்தது ஒரு மாத காலமாவது படப்பிடிப்பில் எதுவும் கலந்து கொள்ளாமல் ஓய்வில் இருக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனராம். இதனால், ‘சபாஷ் நாயுடு’ படத்தின் மீதிக்காட்சிகளுக்கான படப்பிடிப்பு தற்காலிமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. செப்டரில் மீதமுள்ள படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்த வருட இறுதியில் படத்தை திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறாராம் உலகநாயகன்.

முதலில் ‘சபாஷ் நாயுடு’ படத்தை மலையாள இயக்குனர் ராஜீவ்குமார் இயக்குவதாக இருந்தது. ஆனால், லாஸ் ஏஞ்செல்ஸிற்கு படப்பிடிப்பிற்காக சென்றபோது உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் ராஜீவ்குமார் அனுமதிக்கப்பட, நடிப்பதோடு இயக்குனர் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார் கமல்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ


;