சந்தோஷ் நாராயணின் இசையில் விஜய் பாடும் வித்தியாசமான பாடல்!

பல வருடங்களாகப் பாடி வரும் விஜய், முதல்முறையாக சந்தோஷ் நாராயணனின் இசையமைப்பில் வித்தியாசமான பாடல் ஒன்றை பாடவிருக்கிறார்

செய்திகள் 25-Jul-2016 10:16 AM IST Chandru கருத்துக்கள்

தான் நடிகராக அறிமுகமான காலகட்டத்திலேயே, தனது பெரும்பாலான படங்களில் ஏதாவது ஒரு பாடலைப் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்த விஜய், இடையில் கொஞ்ச காலமாக ‘பாடகர் விஜய்’க்கு பிரேக் விட்டிருந்தார். இந்நிலையில், ‘துப்பாக்கி’ படத்தில் ஹாரிஸின் இசையில் பாடிய ‘கூகுள் கூகுள்’ பாடல் மூலம் ரசிகர்களுக்கு மீண்டும் பாடகர் விஜய்யின் குரலைக் கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்பாடலின் சூப்பர்ஹிட் வெற்றியைத் தொடர்ந்து அதன்பிறகு வெளிவந்த ஒவ்வொரு படங்களிலும் தொடர்ந்து ஒரு பாடலைப் பாடி வருகிறார் இளையதளபதி. பெரும்பாலும் டூயட் பாடல்களையே விஜய் பாடி வரும் விஜய், பரதன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘விஜய் 60’ படத்துக்காக சந்தோஷ் நாராயணின் இசையில் வித்தியாசமான பாடல் ஒன்றைப் பாடவிருக்கிறாராம்.

இந்த தகவலோடு, ‘விஜய் 60’ பற்றிய மேலும் ஒரு சுவாரஸ்ய செய்தியும் நம் காதுகளை எட்டியது. படத்தின் முக்கிய சில காட்சிகளை படமாக்குவதற்காக பிரபல ஸ்டுடியோ ஒன்றில் கோயம்போடு பேருந்து நிலையம் போன்ற மிகப்பெரிய செட் ஒன்று போடப்பட்டு வருகிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;