பாலிவுட் படங்களின் வசூலை ஓரம் கட்டிய ‘கபாலி’

‘கபாலி’யின் முதல் நாள் கலெக்ஷன் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது

செய்திகள் 23-Jul-2016 12:20 PM IST Chandru கருத்துக்கள்

தாணு தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்க சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து, எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள ‘கபாலி’க்கு எதிர்பார்த்தைவிட மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் 800+, ஆந்திரா, தெலுங்கானாவில் 750+, கேரளாவில் 300+, கர்நாடகாவில் 250+, இந்தியாவில் இதர பகுதிகளில் கிட்டத்தட்ட 1000 ஸ்கிரீன்ஸ் என இந்தியாவில் மட்டுமே கிட்டத்தட்ட 3000 ஸ்கிரீன்களில் திரையிடப்பட்ட ‘கபாலி’ படத்தின் முதல் நாள் இந்திய வசூல் மட்டுமே 55 கோடியைத் (Gross) நெருங்கியிருக்கும் என தயாரிப்பு தரப்புக்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்திருக்கிறது. அதோடு அமெரிக்காவில் திரையிடப்பட்ட பிரீமியர் ஷோவில் இதுவரை எந்த ஆசிய திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு 13 கோடி வசூல் (Gross) ‘கபாலி’க்கு கிடைத்துள்ளதாம். மலேசியாவில் மலாய் மொழியிலேயே வெளியிடப்பட்டதால் அங்கும் கணிசமான வசூலை குவித்துள்ளதாம் இப்படம். ஒட்டுமொத்தமாக வெளிநாடுகளில் மட்டுமே முதல்நாளில் 40 கோடிக்கும் அதிகமான வசூல் (அமெரிக்க பிரீமியர் ஷோ உட்பட) கிடைத்திருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுவரை உலகளவிலான வசூலில் பாலிவுட் படங்களே முன்னணியில் இருந்து வந்துள்ளன. சமீபத்தில் வெளிவந்த சுல்தான் படமே முதல்நாளில் 70 கோடிகளைத்தான் (Gross) குவித்தது. ஆனால், ‘கபாலி’ முதல் நாளில் மட்டுமே 100 கோடி (Gross) வசூலை நெருங்கியிருக்கிறதாம்.

இந்திய அளவிலான வசூல் (Gross) விவரங்கள் (தோராய மதிப்பீடு)

தமிழ்நாடு : 20 கோடி
ஆந்திரா, தெலுங்கானா : 15 கோடி
கேரளா : 4 கோடி
கர்நாடகா : 3 கோடி
வடமாநிலங்கள் : 13 கோடி

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;