‘இருமுகன்’ இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள்?

பிரபலங்கள் முன்னிலையில் இருமுகன் ஆடியோ வெளியீடு!

செய்திகள் 23-Jul-2016 11:13 AM IST VRC கருத்துக்கள்

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இருமுகன். விக்ரம் இரு மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஆக்ஸட் 2-ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்ட முறையில் நடைபெறவிருக்கிறது. இவ்விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நிவின் பாலி, தெலுங்கு நடிகர் ராம் சரண் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவரும் இந்த இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்க இருப்பதாக ‘இருமுகன்’ படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பெரும் பொருட்செலவில் ஷிபு தமீன்ஸ் தயாரித்து வரும் ‘ இருமுகன்’ படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;