சூர்யாவிற்கு ‘செய்’ படக்குழுவினரின் பிறந்தநாள் பரிசு!

சூர்யா பிறந்த நாளையொட்டி  ‘செய்’ படக்குழுவினர் செய்த புதுமை!

செய்திகள் 23-Jul-2016 10:51 AM IST VRC கருத்துக்கள்

இன்று நடிகர் சூர்யா பிறந்த நாள்! அவரது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடும் விதமாக நகுல், பாலிவுட் நடிகை ஏஞ்சல் நடிப்பில் ’செய்’ படத்தை தயாரிக்கும் ‘ட்ரிப்பி டர்டில் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனத்தினர் ஒரு புதுமையை செய்துள்ளனர். அதாவது சூர்யா நடித்த ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தில் இடம் பெற்ற ‘முன்பே வா..’ என்று துவங்கும் பாடலை ’செய்’ படத்திற்கு இசை அமைக்கும் நிக்ஸ் லோபஸ் ரீ-மிக்ஸ் செய்துள்ளார். இந்த பாடலை பின்னணி பாடகர் மோஹித் ஷ்யாம் பாடியுள்ளார். இப்பாடலை ‘செய்’ படக்குழுவினர் நேற்று இரவு 12 மணிக்கு யு-டியூப் தளத்தில் வெளியிட்டு சூர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ராஜ் பாபு இயக்கி வரும் ‘செய்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;