ரேடியோ ஸ்டேஷன் அதிகாரியானார் சத்யராஜ்!

மாறுபட்ட கேரக்டரில் சத்யராஜ் நடிக்கும் படம்!

செய்திகள் 22-Jul-2016 4:23 PM IST VRC கருத்துக்கள்

‘ஜாக்சன் துரை’ ஹாரர் படத்தை தொடர்ந்து சத்யராஜ் கிட்னாப் த்ரில்லர் ரக கதையமைப்பை கொண்ட ஒரு படத்தில் நடித்து வருகிறார். ‘நாதம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் சார்பில் சத்யராஜே தயாரித்து நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்குகிறார். இப்படத்தில் நடிப்பது குறித்து சத்யராஜ் கூறும்போது,

‘‘இயக்குனர் கார்த்திக் என்னிடம் வந்து இந்த கதையை சொன்னதும் இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அந்த அளவிற்கு கதை என்னை கவர்ந்துவிட்டது. ஒரு ரேடியோ ஸ்டேஷனுக்கும் ஒரு கடத்தல்காரனுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான் சம்பவங்கள் தான் படம்! இதில் நான் ரெடியோ ஸ்டேஷன் தலைமை அதிகாரியாக நடிக்கிறேன்.

படப்பிடிப்பில் தொகுப்பாளர்களும், எஃப்.எம்.வாடிக்கையாளர்களும் ஓயாமல் பேசி கொண்டிருப்பதும், அதை நான் கண் காணிப்பதுமான கேரக்டர் புதுவித அனுபவமாக இருக்கிறது. என நடிப்பு வாழ்க்கையில் இது மாறுபட்ட ஒரு கேரக்டராக அமைந்துள்ளது’’ என்றார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஐந்து நாட்களாக நடந்து வருகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் இசை அமைக்கிறார். ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்தின் அதிகாரபூர்வ டைட்டில் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கின்றனர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;