இரட்டை சந்தோஷத்தில் தாணு!

‘தெறி’ 100-ஆவது நாளில் கபாலி!

செய்திகள் 22-Jul-2016 1:26 PM IST VRC கருத்துக்கள்

‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிப்பில் கடந்த தமிழ் புத்தாண்டை ஓட்டி (ஏப்ரல்-14-ஆம் தேதி) வெளியான படம் ‘தெறி’. அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்‌சன், இயக்குனர் மகேந்திரன் முதலானோர் நடித்த இப்படம் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்று தொடர்ந்து 100 நாட்கள் ஓடியது! இது விஜய், அட்லி, ‘கலைப்புலி’ எஸ்.தாணு முதற்கொண்டு ‘தெறி’ டீமுக்கு கிடைத்த வெற்றி என்பதோடு ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகியிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கபாலி’ திரைப்படமும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருப்பதால் டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார் இப்படங்களின் தயாரிப்பாளரான ‘கலைப்புலி’ எஸ்.தாணு! இது தவிர ‘தெறி’ திரைப்படம் வெளியாகி 100 நாட்கள் ஆன தினமே ‘கலைப்புலி’ எஸ்.தாணுவின் பிரம்மாண்ட தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உலகம் முழுக்க பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ரஜினியின் ‘கபாலி’ வெளியாகியிருப்பதும் ஸ்பெஷலான விஷயமாகும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;