‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ நிறுவன தயாரிப்பில் நயன்தாரா நடித்து சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படம் ‘மாயா’. ஹாரர் பட வரிசையில் வித்தியாசமாக அமைந்த இப்படத்தின் வெற்றியில் இப்படத்திற்கு இசை அமைத்த ரான் ஏதன் யோஹானுக்கும் முக்கிய பங்குண்டு. ‘மாயா’வின் பின்னணி இசைக்காக மாசிடோனியன் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா (Macedonian Symphony Orchestra) வைப் பயன்படுத்தியிருந்தார் ரான் யோஹான். இந்த ஆர்கெஸ்ட்ராவுடன் ரான் ஏதன் யோஹான் வித்தியாசமாக அமைத்த ‘மாயா’வின் பின்னணி இசை எல்லோராலும் பேசப்பட்டது. இந்த படத்தை தொடர்ந்து ரான் ஏதன் யோஹானுக்கு கதிர் நடிக்கும் ‘சிகை’ படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்து அப்படத்தில் தற்போது பணியாற்றி வருகிறார்! இப்படத்துடன் ரான் ஏதன் யோஹானுக்கு மலையாள படமொன்றுக்கு பின்னணி இசை அமைக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. பிரபல மலையாள இயக்குனர் ப்ரியதர்சன் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் ‘ஒப்பம்’ படத்திற்கு பின்னணி இசை அமைக்கும் பொறுப்பு ரான் ஏதன் யோஹானிடம் வழங்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் மற்றும் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மோகன்லாலுடன் முதன் முதலாக பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ள சந்தோஷத்தை தனது ஃபேஸ்புக் பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார் ரான் ஏதன் யோஹான்!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி வந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் அனைத்து...
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து சென்ற வருட தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் ‘பிகில்’....