அஜித்துடன் இணைகிறாரா அக்‌ஷரா ஹாசன்?

‘AK-57’-ல் அக்‌ஷரா ஹாசன்?

செய்திகள் 21-Jul-2016 2:44 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் சிவாவும், அஜித்தும் மூன்றாவது முறையாக இணையும் ‘AK-57’ படத்தில் காஜல் அகர்வால கதாநாயகியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் வரும் மற்றொரு முக்கியமான கேரக்டரில் ‘பிரேமம்’ பட புகழ் சாய் பல்லவி நடிக்க இருக்கிறார் என்றும் அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது என்றும் ஒரு சில நாட்களுக்கு முன் பேசப்பட்டு வந்தது. . ஆனால் சாய் பல்லவி நடிக்கவில்லை என்றும் இப்போது அந்த கேரக்டருக்காக கமல்ஹாசன் மகள் அக்‌ஷா ஹாசனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்றும் அநேகமாக அக்‌ஷரா ஹாசன் ‘AK-57’-ல் நடிக்க ஒப்புக்கொள்வார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது. ஆனால் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் சம்பந்தப்பட்ட தகவல்களை தயாரிப்பு தரப்பினர் இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமிதாப்பச்சன், தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘ஷமிதாப்’ ஹிந்தி படத்தில் கதாநாயகியாக நடித்த அக்‌ஷரா ஹாசன் அப்படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பதும், தற்போது அவர் கமல்ஹாசன் இயக்கி, நடித்து வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் கமலுடன் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நேர்கொண்ட பார்வை டிரைலர்


;