’தி காஞ்ஜுரிங்’ இயக்குனரின் தயாரிப்பில் வெளிவரும் ‘லைட்ஸ் அவுட்’

’தி காஞ்ஜுரிங்’ இயக்குனரின் தயாரிப்பில் வெளிவரும் ‘லைட்ஸ் அவுட்’

செய்திகள் 21-Jul-2016 12:50 PM IST Chandru கருத்துக்கள்

David F. Sandberg உருவாக்கிய குறும்படமான 'Lights Out'ஐ தழுவி, திரையில் வடிககப்பட்டுள்ள ஆவிகளை பற்றி ஆராய்கிற ஒரு திகில் படமிது! David F. Sandberg முதன்முறையாக ஹாலிவுட்டில் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள இப்படத்திற்கு Eric Heisserer கதை அமைத்துள்ளார். Lawrence Grey, Eric Heisserer தவிர, ’தி காஞ்ஜுரிங்’, ’தி காஞ்ஜுரிங் 2’, Fast & Furious 7 ஆகிய படங்களின் இயக்குநர் ஜேம்ஸ் வானும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

அழகிய இளம் பெண்ணான Rebecca (Teresa Palmer) சிறு வயது முதல் இருள் என்றாலே அச்சம் கொள்வாள். வளர்ந்து பெரிய பெண்ணாக ஆன போதிலும் கூட இந்த இருள் பயம் தொடர்கிறது! அவளது தம்பியான Martin (Gabriel Bateman) அது போன்ற இருள் சார்ந்த அனுபவங்களை எதிர்கொள்கிறான் என அறிய வரும் போது ரிபெக்காவின் கவலை மேலும் அதிகரிக்கிறது. அவர்களது தாயார் Sophie மன ரீதியாக, திடமானவர் இல்லை! இரவில், விளக்கு அணைந்தவுடன் இருள் சூழ கண்ணில் தென்படும் உருவம் உண்மையா அல்லது மனதின் கற்பனையா என குழம்பி நிற்கிறான் Martin. அதை கண்டு Rebecca வும் திகைத்து நிற்கிறாள். Rebeccaவின் இள வயது தோழியான Diana (Alicia Vela-Bailey) இருளை மிகவும் விரும்பக் கூடியவள் என்கிற ஒரு விஷயம் Rebecca விற்கு நினைவில் வர, இந்த பிரச்சனையிலிருந்து விடுபட அவளின் உதவியை நாடுகிறார்கள். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை வைத்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

5 million அமெரிக்க dollars செலவில் உருவாகியுள்ள இப்படம் 81 நிமிடங்கள் ஓட்ட நேரம் கொண்டது. Los Angeles Film Festival இல் முதன்முதலாக திரையிடப்பட்டது. Benjamin Wallfisch இசை அமைத்துள்ளார். Marc Spicer ஒளிப்பதிவு செய்துள்ளார். Michel Aller படத்தை தொகுத்துள்ளார். The Conjuring, The Conjuring 2, போன்ற படங்களை வழங்கிய Warner Bros. நிறுவனத்தின் உருவாக்கம் இப்படம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;