கேரளாவிலும் சாதனை படைத்த கபாலி!

கேரளாவில் மற்றுமொரு சாதனை படைத்த கபாலி!

செய்திகள் 21-Jul-2016 10:48 AM IST VRC கருத்துக்கள்

பெரும் எதிர்பார்ப்புடன் நாளை உலகம் முழுக்க வெளியாகவிருக்கிற ரஜினிகாந்தின் ‘கபாலி’ கேரளாவிலும் பெரும் சாதனை படைக்கவிருக்கிறது. கேரளாவில் ‘கபாலி’யை வெளியிடும் உரிமையை நடிகர் மோகன்லாலும் அவரது மானேஜர் பெரும்பாவூர் ஆண்டனியும் பெரும் தொகைக்கு கைபற்றியிருக்கிறார்கள் என்ற தகவலை நமது இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். கேரளாவை பொறுத்தவரை இதுவரை வேறு எந்த ஒரு தமிழ் படமும் இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கப்பட்டது இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கேரளாவை பொறுத்தவரையில் ‘கபாலி’ மற்றுமொரு சாதனையும் படைக்கவிருக்கிறது. அதாவது, ‘கபாலி’ நாளை கேரளாவில் 306 தியேட்டர்களில் வெளியாகவிருப்பதை பிரபல பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியாகியுள்ளன. மலையாள படங்கள் தவிர வேறு ஒரு மொழி படம் இவ்வளவு தியேட்டர்களில் வெளியாகும் பெருமையும் ரஜினியின் ‘கபாலி’க்கு கிடைத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;