‘விஸ்வரூபம்-2’ ரிலீஸ் குறித்து கே.எஸ்.ரவிக்குமார்!

‘விஸ்வரூபம்-2’ ரிலீஸ் தேதி?

செய்திகள் 20-Jul-2016 2:35 PM IST VRC கருத்துக்கள்

‘விஸ்வரூபம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, கமல் இயக்கி நடிக்கும் ‘விஸ்வரூபம் 2’ படம் எப்போது ரிலீசாகும் என்று ஏங்கி தவித்துக் கொண்டிருக்கும் கமல் ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் ஒரு செய்தி! தற்போது ‘சபாஷ் நாயுடு’ படத்தை இயக்கி, நடித்து வரும் கமல்ஹாசன் ‘விஸ்வரூபம்-2’ படத்தையும் விரைவில் ரிலீஸ் செய்ய முடிவு செய்து, அதற்கான வேலைகளை துரிதப்படுத்தியுள்ளாராம். அதாவது தீபாவலிக்கோ அல்லது அதற்கு முன்னாடியோ எப்படியும் ’விஸ்வரூபம்-2’ படத்தை ரிலீஸ் செய்து விடுவார் கமல்ஹாசன என்று கூறப்படுகிறது! இன்று சென்னையில் நடந்த ‘முடிஞ்சா இவன புடி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இந்த தகவலை சொன்னார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். அதாவது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள ‘முடிஞ்சா இவன புடி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு கமல்ஹாசனை அழைக்க சென்ற கே.எஸ்.ரவிகுமாரிடம் ‘விஸ்வரூபம்-2’ மற்றும் ‘சபாஷ் நாயுடு’ படங்கள் குறித்து பேசிய கமல்ஹாசன் ‘விஸ்வரூபம்-2’ படத்தை விரைவில் ரிலீஸ் செய்யவிருப்பதாக கூறியுள்ளார். இதனால் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்!.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அயோக்யா ட்ரைலர்


;