‘சவாரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கிய குகனின் அடுத்த படமாக உருவாகிவரும் ‘கண்ணீர் அஞ்சலி’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டன. சில மாதங்களுக்கு முன்பு, கருணாகரன், ராஜேந்திரன், ஆனந்தராஜ் ஆகியோரின் ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர்களால் சென்னையே பரபரப்புக்குள்ளானது. அது எல்லாமே இப்படத்தின் புரமோஷன்தான். இறப்பிற்குப் பின்பு மனிதனின் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ஃபேன்டஸி காமெடிப் படமே இது என்கிறார் படத்தின் இயக்குனர் குகன்.
‘‘நாம் இறந்தபிறகு என்னாவோம் என ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவிதமான சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்கும். நரகம், சொர்க்கம், மறுபிறவி உட்பட இப்படி உலவும் பல நம்பிக்கைகளை மையமாக வைத்து, அதையே காமெடியாக யோசித்தால் எப்படி இருக்கும் என்பதன் விளைவே இந்த கண்ணீர் அஞ்சலி!’’ என்று கூறியிருக்கும் குகன், இப்படத்தில் கருணாகரன் நாயகனாகவும், ஆன்தராஜ் வில்லனாகவும், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் முக்கிய வேடமொன்றிலும் நடிக்கிறார் எனவும் தெரிவித்தார். சிற்சில காட்சிகளுக்கான படப்பிடிப்பு, போஸ்ட் புரெடாக்ஷன் வேலைகள் மட்டுமே முடிய வேண்டியிருக்கிறதாம். இதனால் விரைவில் ‘கண்ணீர் அஞ்சலி’க்கான ரிலீஸ் தேதியை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.
‘K-13’ படத்தை தொடர்ந்து அருள்நிதி, ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் 90-வது படமாக உருவாகி வரும்...
நடிகர்கள் ஜெயராம், தீலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளை வைத்து 25...
ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும் இந்த படத்தை இயக்குனர் கண்ணனின்...