‘கபாலி’ டிக்கெட்டுக்காக ஒரே நாளில் 6 லட்சம் மிஸ்டு கால்கள்?

‘ப்ளூ கார்ப்பெட்’ என்ற பெயரில் ரேடியோ சிட்டி நடத்தும் ‘கபாலி டிக்கெட்’ போட்டிக்காக 6 லட்சம் மிஸ்டு கால்கள் கொடுக்கப்பட்டுள்ளன

செய்திகள் 19-Jul-2016 5:21 PM IST Chandru கருத்துக்கள்

பிபரல தமிழ் எஃப்.எம். சேனல்களில் ரேடியோ சிட்டியும் (91.1) ஒன்று. வெள்ளிக்கிழமை வெளியாகும் பிரபல நட்சத்திரங்களின் படங்களுக்கு டிக்கெட் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை ‘ப்ளூ கார்ப்பெட்’ என்ற பெயரில் இந்த சேனல் நீண்ட நாட்களாக நடத்தி வருகிறது. இந்த போட்டியில் கலந்துகொள்ள ரசிகர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்... அவர்கள் கொடுக்கும் நம்பர் ஒன்றிற்கு ரசிகர்கள் தங்களது மொபைலிலிருந்து மிஸ்டு கால் ஒன்றைத் தரவேண்டும். இப்படி மிஸ்டு கால் கொடுக்கப்படும் நம்பர்களில் லக்கி வின்னர்களுக்கு ‘கபாலி’யின் டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும்.

அந்தவகையில், இந்த வாரம் வெளியாகவிருக்கும் ‘கபாலி’க்காகவும் இந்த ‘ப்ளூ கார்ப்பெட்’ நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறது ரேடியோ சிட்டி. வழக்கமாக வரும் மிஸ்டுகால்களைவிட, எப்படியும் ‘கபாலி’க்கு அதிகப்படியான மிஸ்டுகால்கள் வரும் என நினைத்துக் கொண்டிருந்த அந்த சேனல் நிர்வாகத்தை ஆச்சரியப்படுத்தும் வகையில் லட்சக்கணக்கான மிஸ்டு கால்கள் அதிர வைத்துக் கொண்டிருக்கிறதாம். இதுவரை எந்தப் படத்திற்கும் இல்லாத அளவிற்கு, இந்த போட்டியை ஆரம்பித்த முதல் நாளிலேயே 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மிஸ்டு கால்கள் குவிந்து தள்ளியதாம். அதோடு இன்னும் லட்சக்கணக்கான கால்கள் வந்தவண்ணமும் உள்ளனவாம்.

‘பேரைக்கேட்டாலே சும்மா அதிருதில்ல...’ என ரேடியோ சிட்டியையே திணறவைத்துக் கொண்டிருக்கிறார்கள் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;