நடிகர் ‘பசி’ நாராயணன் குறித்த செய்திகளுக்கு நடிகர் சங்கம் மறுப்பு!

அவதூறு செய்திகளை வெளியிட வேண்டாம்!  நடிகர் சங்கம் வேண்டுகோள்!

செய்திகள் 19-Jul-2016 4:56 PM IST VRC கருத்துக்கள்

கடந்த சில காலங்களாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக சிலர் ஊடகங்கள் மூலமாக தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். தற்சமயம் மறைந்த நடிகர் திரு.பசி நாராயணன் அவர்களது குடும்பம் வறுமையில் வாடுவதாகவும், நடிகர் சங்கம் அவர்களை கண்டு கொள்ளவில்லை என்றும், மேலும் அவர் சங்க உறுப்பினர் அல்லாத காரணத்தால் உதவி அளிக்க இயலாது என்று சங்கம் தெரிவித்ததாகவும் சில நாளிதழ்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இது முற்றிலும் தவறான செய்தியாகும்.

நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரான திரு. பசி நாராயணன் இறந்த பிறகு அவரது குடும்பம் வறுமையில் கஷ்டப்படுவதாக தெரிந்தபோது, அவர்களது நிலைமை புரிந்து கொண்டு நிர்வாகம் உதவி கரம் நீட்டியது. 19.01.2016 அன்று அவரது மகள் ஆர்.ரேவதிக்கு காசோலையாக ரூபாய் 35000/- (ஐசிஐசிஐ வங்கி காசோலை எண்.636529) தொழில் உதவியாக வழங்கியது. இதைபோல பிற உறுப்பினர்களுக்கும் நிதி உதவி, மருத்துவ உதவி, கல்வி உதவி என்று பல உதவிகளை சங்கம் செய்து வருகிறது. இப்படியிருக்க நடிகர் சங்கம் பற்றி தவறான செய்திகளை பரப்புவது மிகவும் வருந்ததக்கது.

மேலும் நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், இணையதளங்கள் இதுபோன்ற செவி வழி செய்திகள் வெளியிடுவதற்கு முன் அந்த செய்திகளை பற்றிய உண்மை நிலவரத்தை நடிகர் சங்க நிர்வாகிகளிடமோ அல்லது சங்க அலுவலக பொதுமேலாளர் திரு. பாலமுருகன் (அலைபேசி 9841193196, தொலைபேசி 044 – 28342832 மின்னஞ்சல் nsct2015@gmail.com) அவர்களை தொடர்பு கொண்டு விசாரித்தபின் செய்திகளை வெளியிடுமாறு வேண்டுகிறோம். இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில் கூறியுள்ளது.​

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;