நாய், பேயை தொடர்ந்து வாஸ்து மீன்!

நாய், பேயை தொடர்ந்து வாஸ்து மீனுடன் களமிறங்கும் சிபிராஜ்!

செய்திகள் 19-Jul-2016 4:36 PM IST VRC கருத்துக்கள்

‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘ஜாக்சன் துரை’ என வெற்றிப் படங்களை கொடுத்து வரும் சிபிராஜின் அடுத்த படம் ‘கட்டப்பாவை காணோம்’. ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் நாயையும், ‘ஜாக்‌சன் துரை’யில் ’பேயையும் வைத்து கதை சொன்ன சிபி ராஜ் இப்படத்தில் வாஸ்து மீனை கையில் எடுத்திருக்கிறார்! இயக்குனர் அறிவழகனிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த மணி செய்யோன் இயக்கும் இப்படத்தை . ‘வின்ட் சைம்ஸ் மீடியா என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் மது சூதன்ன கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், லலித் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்! ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் சாந்தினி, காளி வெங்கட், மைம் கோபி, யோகி பாபு, லிவிங்ஸ்டன், சித்ரா லட்சுமணன், திருமுருகன், ஜெயக்குமார் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படம் குறித்து இயாகுனர் மணி செய்யோன் கூறும்போது, ‘‘ஒரு வாஸ்து மீனை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸை வைத்து ரசிகரக்ளை ஏமாற்ற விரும்பவில்லை. அதனால் நிஜ மீனை வைத்து அதற்கு கட்டப்பா என்று பெயர் சூட்டி படமாக்கி வருகிறோம்! கதை ஓகே ஆனவுடனே இந்த வாஸ்து மீனை வாங்கி வந்து அதனுடன் சுமார் நான்கு மாத காலம் பழகி வந்தேன். நாய்கள் போலவே மீன்களிடமும் தங்களின் உரிமையாளர்களை அடையாளம் கண்டு கொள்ளும் சக்தி இருக்கிறது. இது குழந்தைகளுக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்’’ என்றார்!

இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார். ஆனந்த் ஜீவா ஒளிப்பதிவு செய்கிறார். இப்போது படப்பிடிப்பில் இருந்து வரும் ’கட்டப்பாவை காணோம்’ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரங்கா டீஸர்


;