சாந்தனுவுக்கு கை கொடுக்கும் ‘ஜெயம்’ ரவி!

சாந்தனுவுடன் இணையும் ‘ஜெயம்’ ரவி!

செய்திகள் 19-Jul-2016 3:31 PM IST VRC கருத்துக்கள்

சாந்தனு கதாநாயகனாக நடிக்கும் படம் ‘முப்பரிமாணம்’. ‘சமயாலயா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குனர்கள் கதிர், பாலா ஆகியோரிடம் பணிபுரிந்த அதிரூபன் இயக்கும் இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் படம் இது. ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கும் இப்படத்தின் டீஸரை நாளை மாலை 5 மணிக்கு ‘ஜெயம்’ ரவி வெளியிடுகிறார். இதனை ‘ஜெயம்’ ரவியே ட்வீட் செய்துள்ளார். தங்கர்பச்சான் இயக்கத்தில் ‘அம்மாவின் கைபேசி’ படத்தில் கதாநாயகனாக நடித்த சாந்தனு, பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இப்படங்களை தொடர்ந்து சாந்தனு நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கிற படம் ’முப்பரிமாணம்’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;