சசிகுமாரின் ‘கிடாரி’ இசை வெளியீடு எப்போது?

‘தர்புக்கா’ சிவா இசை அமைக்கும் முதல் படம்?

செய்திகள் 19-Jul-2016 3:06 PM IST VRC கருத்துக்கள்

‘வெற்றிவேல்’ படத்தை தொடர்ந்து சசிகுமார் நடிக்கும் ‘கிடாரி’யின் ஷூட்டிங் வேலைகள் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டதாம்! அறிமுக இயக்குனர் பிரசாத் முருகேசன் இயகும் இப்படத்திற்கு ‘தர்புக்கா’ சிவா இசை அமைக்கிறார். இவர் இசை அமைக்கும் முதல் படம் இது. இப்படத்திற்காக இவர் இசை அமைத்து, அனிதா மற்றும் வேல்முருகன் இணைந்து பாடிய ‘தலைகாலு புரியலையே..’ என்று துவங்கும் பாடலை கடந்த 15-ஆம் தேதி வெளியிட்டார் இயக்குனர் கௌதம் மேனன். இப்பாடல் வெளியீட்டை தொடர்ந்து ‘கிடாரி’யின் அனைத்து பாடல்களையும் அடுத்த (ஆகஸ்ட்) மாதம் முதல் வாரம் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்! இதனை தொடர்ந்து படத்தை செப்டம்பர் முதல் வாரமும் வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம். ‘கிடாரி’யை சசிகுமாரே தனது ‘கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சாபில் தயாரிக்கிறார். கதாநாயகியாக ‘வெற்றிவேல்’ படத்தில் நடித்த நிகிலா விமல் நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;