ஒரு படத்தின் ரிலீஸ் நாளை ஒட்டுமொத்த இந்தியாவும் திருவிழாவைக் கொண்டாடுவதற்கு காத்திருப்பதுபோல் நடப்பது வேறு எந்த படத்திற்கும் நிகழ்ந்திராத ஒன்று. அது... சூப்பர்ஸ்டார் படமாக இருந்தாலேயன்றி! ஆம்... ‘கபாலி’யின் அறிவிப்பு வந்த நாள் முதல், அது ரிலீஸாகவிருக்கும் வரும் ‘கபாலி’ படத்தைப் பார்ப்பதற்காக விடுமுறை விடப்பட்ட தனியார் நிறுவனம்.... இப்படி எண்ணற்ற ஆச்சரியங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த வகையில், வரும் 22ஆம் தேதி ஒட்டுமொத்த கோலிவுட்டும் படப்பிடிப்பை ஒத்திவைக்கும் எண்ணத்திலிருப்பதாகவும் தற்போதைய தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும், நடிகர் சிம்புவும், ‘கபாலி’யின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க தயாராகிக் கொண்டிருப்பதாக ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்கள். அதேபோல் அருண்விஜய்யின் ‘குற்றம் 23’ பட டீமும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இவர்களைப்போல இன்னும் எத்தனையே சினிமா பிரபலங்கள் ‘கபாலி’யின் தரிசனத்திற்காக எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆதிக் ரவிச்சந்திரனும், பிரபு தேவாவும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்றும் இந்த படத்தின் அதிகாரபூர்வ...
நடிகர் ரஜினிகாந்த் உலகப் புகழ்பெற்ற டிஸ்கவரி சேனலின் பியர் க்ரில்ஸுடன் சேர்ந்து ‘MAN VS WILD என்ற...
மாநகரம், கைதி ஆகிய படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி...