கடும் போட்டியில் கபாலி, சுல்தான் : 3 கோடியை எட்டப்போவது யார்?

‘தில்வாலே’ டிரைலர் சாதனையை முறியடித்து 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது ‘கபாலி’ டீஸர்

செய்திகள் 19-Jul-2016 11:06 AM IST Chandru கருத்துக்கள்

நீண்டநாட்களாக ‘க்ரிஷ் 3’ படம் வசமிருந்த யு டியூப் சாதனையை முறியடித்து முதல் இடத்தை கைப்பற்றியது ஷாருக் கானின் ‘தில்வாலே’ டிரைலர். 2015 நவம்பரில் வெளியிடப்பட்ட இந்த டிரைலர் தற்போது வரை 2 கோடியே 56 லட்சத்திற்கும் மேற்பட்டமுறை பார்வையிடப்பட்டுள்ளது. இந்த சாதனையை ‘கபாலி’யின் டீஸர் கண்டிப்பாக முறியடிக்கும் என டீஸர் வெளியான முதல் நாளே கூறப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாக சல்மான் கானின் சமீபத்திய ரிலீஸான ‘சுல்தான்’ முந்திக் கொண்டது.

இந்த வருடம் மே 24ஆம் தேதி வெளியான ‘சுல்தான்’ டிரைலர் படம் வெளிவருவதற்கு முன்பு வரை ‘கபாலி’யை விட பின்தங்கியே இருந்தது. ஆனால், படம் வெளியாகி பெரிய வரவேற்பு கிடைக்கவும், மீண்டும் அந்த டிரைலரை பலமுறை கண்டுகளித்தனர் ரசிகர்கள். இதனால், தற்போது ‘சுல்தான்’ பட டிரைலருக்கு 2 கோடி 87 லட்சம் பார்வையிடல்களுக்கு மேல் கிடைத்துள்ளன. இந்த எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், ‘கபாலி’ டீஸரின் சாதனைப் பயணமும் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது, ‘தில்வாலே’ டிரைலர் சாதனையை முறியடித்து, ‘கபாலி’ டீஸர் 2 கோடியே 57 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையிடல்களைப் பெற்றுள்ளது. நாளுக்கு நாள் ‘கபாலி’யின் எதிர்பார்ப்பு எகிறி வருவதாலும், பட ரிலீஸுக்குப் பின்னர் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்தும் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம். இதனால் இந்திய அளவில் 3 கோடி பார்வையிடல்களை எட்டும் முதல் டீஸராக ‘கபாலி’ இருக்குமா? அல்லது அதற்கு முன்பாகவே ‘சுல்தான்’ டிரைலர் அந்த சாதனையைப் படைக்குமா? என்பதைப் பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;