கே.எஸ்.ரவிகுமாருடன் இணையும் தனுஷ், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன்!

‘முடிஞ்சா இவன புடி’யில் தனுஷ், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன்!

செய்திகள் 19-Jul-2016 10:22 AM IST VRC கருத்துக்கள்

சுதீப் கதாநாயகனாக நடிக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள படம் ‘முடிஞ்சா இவன புடி’. ரஜினி நடிப்பில் ‘லிங்கா’ படத்தை தயாரித்த ‘ராக்லைன்’ வெங்கடேஷ் தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நாளை (20-7-16) காலை சென்னையில் நடைபெறவிருக்கிறது. நடிகர் தனுஷ் தலைமையில் நடைபெறவிருக்கும் இவ்விழாவில் விஜய்சேதுபதி பாடல்களை வெளியிட சிவகார்த்திகேயன் பெற்றுக் கொள்கிறார். இவர்கள் தவிர மேலும் பல திரையுலக பிரபலங்கள் இவ்விழாவில் கலந்துகொள்ளவிருக்கின்றனர். ‘நான் ஈ’ புகழ் சுதீப் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். ராஜரத்தினம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘லிங்கா’வை தொடர்ந்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளிவரும் படம் இது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;