‘வீரசிவாஜி’க்காக குரல் கொடுத்த விக்ரம் பிரபு!

‘வீரசிவாஜி’ டப்பிங் வேலைகள் முடிந்து விட்டது!

செய்திகள் 18-Jul-2016 4:47 PM IST VRC கருத்துக்கள்

விக்ரம் பிரபு, ஷாம்லி நடிக்கும் ‘வீரசிவாஜி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக நடந்து வந்த இப்படத்தின் டப்பிங் வேலைகளும் இன்றுடன் முடிந்துவிட்டதாம்! ‘தகராறு’ படப் புகழ் கணேஷ் விநாயக் இயக்கியுள்ள இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். ‘மெட்ராஸ் என்டர்பிரைசஸ்’ நிறுவனம் சார்பில் நந்தகோபால் தயாரிக்கும் ‘வீரசீவாஜி’யை விக்ரம் பிரபு நடித்துள்ள ‘வாகா’ பட வெளீட்டுக்கு பிறகு வெளியிட திட்டமிட்டுள்ளனர்! ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கியுள்ள ‘வாகா’ அடுத்த (ஆகஸ்ட்) மாதம் 12 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பாக்கி முனை டீஸர்


;