பெங்களூரு நட்சத்திர ஹோட்டல்களிலும் கபாலி!

பெங்களூருவில் புதிய சாதனை படைக்கவிருக்கும் கபாலி!

செய்திகள் 18-Jul-2016 12:49 PM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமா இதுவரை கண்டிராத வகையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது ரஜினியின் ‘கபாலி’ திரைப்படம்! இப்படம் வெளியாக இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் ‘கபாலி’யை வைத்து பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் பல வணிக நிறுவனங்களும் களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றன. இது தவிர இந்தியாவில் இதுவரை வேறு எந்த ஒரு படமும் செய்யாத ஒரு புது சாதனையை நிகழ்த்தவிருக்கிறது ரஜினியின் ‘கபாலி’. அதாவது, பெங்களூரில் உள்ள சில 7 நட்சத்திர மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்களில் ‘கபாலி’ திரைப்படம் திரையிடப்படவிருக்கிறது. பெங்களூர் விட்டல் மல்லியா சாலையில் அமைந்துள்ள மேரியட் ஹோட்டல், லலித் அஷோக், ராயல் ஆர்சிட் முதலான ஹோட்டல்கள், அந்த ஹோட்டல்களில் உள்ள திரையரங்குகளில், தங்களது வாடிக்கையாளர்களுக்காக ‘கபாலி’யை வெளியிட திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஒரு டிக்கெட்டுக்கு 1300 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்து, மூன்று நாட்கள் ‘கபாலி’யை ஸ்பெஷல் காட்சிகளாக திரையிடவிருக்கிறார்களாம்! இந்த தகவலை ‘லஹரி மியூசிக்’ நிறுவனத்தின் அதிபர் ஆனந்த் உறுதிபட தெரிவித்துள்ளார். ஆனால் இதுபோன்ற ஸ்பெஷல் காட்சிகளுகு கார்பரேஷன் நிர்வாகத்தின் அனுமதி பெற வேண்டும். இப்போது அந்த அனுமதிக்காக காத்திருக்கிறதாம் ஹோட்டல் நிர்வாகத்தினர். ஏற்கெனவே பெங்களூரில் உள்ள தியேட்டர்களில் ‘கபாலி’யின் ப்ரீ புக்கிங் ஆரம்பித்த ஒரு மணி நேரத்திலேயே அத்தனை டிக்கெட்டுக்ளும் முன் பதிவு செய்யப்பட்டு விட்டனவாம்! எனவே பெங்களூருவிலும் பெரும் சாதனை படைக்கவிருக்கிறது ரஜினியின் ‘கபாலி’

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;