‘தல 57’ - மீண்டும் ஒரு மங்காத்தா!

அஜித்துடன் மீண்டும் இணையும் அர்ஜுன்!

செய்திகள் 18-Jul-2016 12:10 PM IST VRC கருத்துக்கள்

அஜித்தும், இயக்குனர் சிவாவும் மூன்றாவது முறையாக இணையும் அஜித்தின் 57-ஆவது படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது. ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ டி.ஜி.தியாகராஜன் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார் என்று கூறப்படுகிறாது. மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு நடந்து வரும் நிலையில் இப்படத்தின் ஒரு முக்கிய கேரக்டருக்கு அர்ஜுன் தேர்வாகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘மங்காத்தா’ படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த அர்ஜுன் மீண்டும் இப்படத்தில் அஜித்துடன் இணையவிருக்கிறார். அர்ஜுன் தவிர பிரபல பாலிவுட் நடிகர் ஒருவரும் ‘AK 57’ல் நடிக்கவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அஜித், சிவா இணைந்த ‘வேதாளம்’ வெற்றிப் படத்திற்கு இசை அமைத்த அனிருத்தே இப்படத்திற்கும் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;