3 மொழிகளில் வெளியாகும் மோகன்லால், கௌதமி படம்!

ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியாகும் மோகன்லால் கௌதமி படம்!

செய்திகள் 18-Jul-2016 11:16 AM IST VRC கருத்துக்கள்

மோகன்லால் கௌதமி இணைந்து நடிக்க, தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகவிருக்கும் படத்திற்கு தமிழில் ‘நமது’ என்றும், தெலுங்கில் ‘மனமன்தா’ என்ரும் மலையாளத்தில் ‘விஸ்மயம்’ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படம் மூன்று மொழிகளிலும் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 5-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. தெலுங்கு பட இயக்குனர் சந்திரசேகர் ஏலட்டி இயக்கியுள்ள இப்படத்தில் மோகன்லால், கௌதமி தவிர்த்து மற்றொரு ஜோடியாக விஸ்வநாத், அனிஷா நடித்துள்ளனர். இவர்களூடன் நாசர், ஊர்வசி, சந்திரமோகன், கொல்லப்புடி மாருதி ராவ் ஆகியோரும் நடித்துள்ளனர். தமிழ் பதிப்பிற்கான வசனம் மற்றும் பாடல்களை மதன் கார்க்கி எழுத, மகேஷ் சங்கர் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை ராகுல் ஸ்ரீவத்சவ் கவனித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹலோ - டிரைலர்


;