திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் விஷ்ணு விஷால், நந்திதா நடித்து 2014ஆம் ஆண்டு வெளிவந்த ‘முண்டாசுப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம். காதல், காமெடி கலந்து அவர் உருவாக்கியிருந்த இந்த பீரியட் ஃபிலிம் விமர்சகர்கள் மத்தியில் மட்டுமின்றி, ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோடு, அந்த வருடத்தின் ஹிட் லிஸ்ட்டிலும் இடம்பிடித்தது இப்படம். கிட்டத்தட்ட 2 வருடங்களுக்குப்பிறகு, இப்போது இயக்குனர் ராமின் அடுத்த படத்திற்கான வேலைகள் துவங்கியுள்ளன.
ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி என்ற நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அறிமுக நடிகர்களும், அனுபவசாலி நடிகர்களும் இணைந்து நடிக்கவிருக்கிறார்களாம். இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக உருவாக உள்ள இப்படத்தில் நாயகனுக்கு போலீஸ் கேரக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அதற்கான நடிகர் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முழுக்க முழுக்க சென்னையில் படமாக்கப்படவுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, ஒளிப்பதிவு செய்கிறார் பிவி சங்கர். கலை இயக்கத்தை கோபி ஆனந்த் கவனிக்கிறார்.
‘K-13’ படத்தை தொடர்ந்து அருள்நிதி, ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் 90-வது படமாக உருவாகி வரும்...
இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராகவும், ‘அஞ்சனவித்தை’ என்ற குறும் படத்தை இயக்கி, தமிழக அரசின்...
திருஞானம் இயக்கத்தில் த்ரிஷா கதையின் நாயகியாக நடிக்கும் படம் ‘பரமபதம் விளையாட்டு’. த்ரிஷா முதன்...