‘யாமிருக்க பயமே’, ‘கோ-2’ உள்பட பல படங்களை தயாரித்த ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான 'கவலை வேண்டாம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஜீவா, காஜல் அகர்வால் கதாநாயகன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை ‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டீகே இயக்கி வருகிறார். ஜீவா நடித்துள்ள ‘திருநாள்’ அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜீவாவின் ‘கவலை வேண்டாம்’ படத்தின் ரிலீஸ் தேதியும் குறிக்கப்பட்டு விட்டது! ஆயுதபூஜை விடுமுறையை ஒட்டி அக்டோபர் 7 ஆம் தேதி ‘கவலை வேண்டாம்’ படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாக தயாரிப்பு தரப்பினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதே தினம் தான் .சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ படமும் ரிலீசாகிறது. இதனால் ஜீவா, சிவகார்த்திகேயன் படங்கள் ஒரே நாளில் ரிலீசாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
‘ஒலிம்பியா மூவில் சார்பில்’ எஸ்.அம்பேத்குமார் தயாரித்திருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் சிங்கிள் ட்ராக்...
காளீஸ் இயக்கத்தில் ‘கீ’, ராஜுமுருகன் இயக்கத்தில் ‘ஜிபிஸி’, டான் சாண்டி இயக்கத்தில் ‘கொரில்லா’ ஆகிய...
தெலுங்கில் புதுமுகங்கள் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘உஷாரு’. இந்த படம் தமிழில்...