மோகன்லாலின் முதல் படம் ‘கபாலி’

தியேட்டர் அதிபரானார் மோகன் லால்!

செய்திகள் 16-Jul-2016 4:16 PM IST VRC கருத்துக்கள்

சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பல துறைகளில் ஆர்வத்துடன் செயல்பட்டு வரும் நடிகர் மோகன்லால், இப்போது மல்டிப்ளக்ஸ் தியேட்டர் ஒன்றுக்கும் அதிபராகி விட்டார். கேரள மாநிலம் தொடுபுழா எனும் ஊரில் 4 ஸ்கிரீன்களை கொண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த மல்டிப்ளக்ஸின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் மோகன்லால் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். இந்த தியேட்டரில் பங்குதாரராக இருக்கும் மோகன்லாலின் மானேஜர் ஆண்டனி பெரும்பாவூரின் குடும்பத்தினர் மற்றும் ஏராளமான மலையாள திரையுலக பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளனர். மொத்தம் உள்ள 4 தியேட்டர்களில் இரண்டு தியேட்டருக்கு மோகன் லாலின் மகன் பெயரான பிரணவ், மகள் பெயரான விஸ்மயா என்றும் மற்ற இரண்டு தியேட்டர்களுக்கு மோகன்லாலின் மானேஜர் மகன், மகள் ஆகியோரது பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன. இந்த 4 தியேட்டர்களிலும் முதல் திரைப்படமாக ரஜினியின் ‘கபாலி’ திரைப்படம் வெளியாகவிருக்கிறது. ‘கபாலி’யின் கேரள விநியோக உரிமையை வாங்கியிருப்பவர் மோகன்லால் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;