முழுக்க முழுக்க சிங்கப்பூரில் படமான ‘பறந்து செல்ல வா’

‘பறந்து செல்லவா’ கதையை மாற்ற சொன்ன ஹீரோக்கள்!

செய்திகள் 16-Jul-2016 11:42 AM IST VRC கருத்துக்கள்

‘இது என்ன மாயம்’, ‘சைவம்’ ஆகிய படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்த லுத்ஃபுதீன் (நாசர் மகன் - பாஷா) கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘பறந்து செல்ல வா’. ‘8 பாயின்ட் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் பி.அருமைச்சந்திரன் தயாரித்துள்ள இப்படத்தை ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ படத்தை இயக்கிய தனபால் பத்மநாபன் இயக்கியுள்ளார். ‘பறந்து செல்லவா’ படத்திற்கு நாசர் மகன் லுத்ஃபுதீனை கதாநாயகனாக தேர்வு செய்ததன் பின்னணி குறித்தும், படம் குறித்தும் இயக்குனர் தனபால் பத்மநாபன் கூறும்போது,

‘‘தமிழ் சினிமாவின் பெரும்பாலான ஹீரோக்களிடமும் இந்த கதையை சொல்லியிருக்கிறேன். ஆனால் எல்லோருமே கதையை கேட்டு விட்டு கதை நல்லா இருக்கு என்று சொன்னார்கள். ஆனால் படம் முழுக்க ஹீரோ இருந்தாலும் முக்கிய முடிவுகள் எடுப்பது படத்தின் கதாநாயகி அல்லது படத்தில் வரும் வேறு கேரக்டர்களாக தான் இருக்கும்! கதையை கேட்ட ஹீரோக்களுக்கு இது பிடிக்கவில்லை! கதையை கொஞ்சம் மாற்ற முடியுமா என்று கேட்டார்கள்! ஆனால் கதையை மாற்றுவதில் எனக்கு உடன் பாடில்லாத்தால் அப்படி தேடும்போது, லுத்ஃபுதீன் நடித்த ‘சைவம்’ படத்தை பார்க்க நேர்ந்தது! ‘சைவம்’ படத்தை பார்த்ததும் என் கதைக்கு லுத்ஃபுதீன் சரியாக இருப்பார் என்று தோன்றியது. உடனே அவரிடம் ஸ்கிரிப்ட்டை கொடுத்தேன். அவரும், நாசர் சாரும் கதையை படித்துவிட்டு, ‘நன்றாக இருக்கிறது, பண்ணலாம்’ என்று சொன்னார்கள். அப்படிதான் இந்த கதைக்குள் லுத்ஃபுதீன் வந்தார்.

முழுக்க முழுக்க காதல், அதை சுற்றி வரும் காமெடி என பயணிக்கும் திரைக்கதை இது. மொத்த கதையும் சிங்கப்பூரில் நடப்பது மாதிரி என்பதால் சென்னை ஏற்போர்ட் தவிர படத்தில் வரும் அனைத்து காட்சிகளையும் சிங்கப்பூரிலேயே படமாக்கப்பட்டுள்ளது! பல படங்களின் படப்பிடிப்புகள் சிங்கப்பூரில் நடந்துள்ளது என்றாலும், முழுக்க முழுக்க சிங்கப்பூரில் படமான படம் இதுவாகதான் இருக்கும் என்று நினைக்கிறேன். ‘லூசியா’ படத்தில் உதவி ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றிய சந்தோஷ், பிரபாகரன் ஆகியோர் சிங்கப்பூரின் அழகை அப்படியே படம் பிடித்துள்ளார்கள். இந்த படத்தை பார்த்தால சிங்கப்பூரை சுற்றி பார்த்த ஒரு உணர்வு எல்லோருக்கும் ஏற்படும் என்பது உறுதி’’ என்கிறார் இயக்குனர் தனபால் பத்மநாபன்.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சிங்கப்பூரில் வாழும் ஒரு மாடர்ன் தமிழ் பெண்னாக நடித்துள்ளார். இன்னொரு நாயகியாக சீன நடிகை நரேல் கேன் நடித்துள்ளார். இவர்களுடன் சதீஷ், கருணாகரன், ஆர்.ஜே.பாலாஜி, ஜோமல்லூரி, சுஜாதா, ஆனந்தி, சுகன்யா ஆகியோரும் நடித்துள்ளனர். ஜோஷ்வா ஸ்ரீதர் இசை அமைத்துள்ளார். இவரது இசையில் அமைந்துள்ள பாடல்களின் வெளியீட்டு விழா சமீபத்தில் சிங்கப்பூரிலேயே நடைபெற்றுள்ளது .இறுதிகட்ட பணிகளில் இருந்து வரும் ‘பறந்து செல்லவா’ படத்தை விரைவில் ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;