படப்பிடிப்புக்குத் தயாராகும் சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடி!

‘ரெமோ’ படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவக்கம்

செய்திகள் 16-Jul-2016 10:40 AM IST Chandru கருத்துக்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ரெமோ’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. விரைவில், டீஸர் பாடல் வெளியீட்டிற்கான ஏற்பாடுகளும் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. படம் அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவந்துவிட்டது. இந்நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து ‘24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தனது 2வது தயாரிப்பாக மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை உருவாக்குகிறது.

‘எதிர்நீச்சல்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடிய நயன்தாரா, இப்படத்தில் அவருக்கு ஜோடியாகவே நடிக்கிறார். வழக்கம்போல் அனிருத் இசையமைக்கிறார். ‘ரெமோ’வின் டப்பிங் வேலைகள் முடிவடையும் தருவாயில் இருப்பதால், இம்மாத இறுதியில் மோகன் ராஜாவின் படத்திற்கான ஷூட்டிங்கில் சிவகார்த்திகேயன் கலந்துகொள்வார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

Mr லோக்கல் டீஸர்


;