அறிவழகன் இயக்கத்தில் அருண்குமார் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘குற்றம் 23’. இன்சினிமா என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் ஆர்த்தி அருண் தயாரிக்கும் இப்படத்தில் அருண் குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படம் குறித்து இயக்குனர் அறிவழகன் கூறும்போது, ‘‘இது மருத்துவம் தொடர்பான கதை. மக்கள் கடவுளுக்கு அடுத்து நம்புவது மருத்துவத்தையும், மருத்துவர்களையும் தான்! அப்படி இருக்கும் மருத்துவ துறையில் தவறுகள் நடந்தால் அது மக்களின் உயிருடன் விளையாடுவது ஆகும். இந்த கான்சப்ட்டை வைத்து இப்பட்த்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கு நல்ல ஒரு மெசேஜை சொல்லும் ஒரு மெடிக்கல் க்ரை த்ரில்லர் படமாக இருக்கும். இதன் கதையை ராஜேஷ் குமார் எழுதியிருக்கிறார். இதில் அருண் விஜய் முதன் முதலாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கதாநாயகியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். ஸ்கூல் டீச்சராக நடிக்கும் மகிமா நம்பியாருக்கும் கதையில் முக்கியத்துவம் உள்ள கேர்கடர் தான்! இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படத்தை முடித்து வெளியிட திட்டமிட்டுள்ளோம்’’ என்றார் இயக்குனர் அறிவழகன்!
அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...
சுந்தர்.சி இயக்கிய ‘முறை மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அருண்...
‘துருவங்கள் பதினாறு’படப்புகழ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி...