‘கபாலி’ உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

‘கபாலி’க்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி!

செய்திகள் 15-Jul-2016 5:52 PM IST VRC கருத்துக்கள்

ரஜினி நடிப்பில் ‘கபாலி’ திரைப்படத்தை தயாரித்துள்ள ‘கலைப்புலி’ எஸ்.தாணு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்திருந்தார். அந்த மனுவில், ‘கபாலி’ திரைப்படத்தை சட்டத்தை மீறி இணையதளங்களில் வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அந்த இணைய தளங்களை தடை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டிருந்தார். ‘கலைப்புலி’ எஸ்.தாணு அளித்த இந்த மனுவை பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஒரு அதிரடியான உத்தரவு பிறப்பித்துள்ளது! அதில், ‘கபாலி’ திரைப்படத்தை சட்ட விரோதமாக வெளியிடும் இணையதளங்களை உடனே முடக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பு ‘கபாலி’ பட குழுவினரை மேலும் உற்சாகமடைய வைத்துள்ளது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;