சர்ப்ரைஸ் தரவிருக்கும் செல்வராகவன், சந்தானம்!

செல்வராகவனுடன் இணயும் சந்தானம்!

செய்திகள் 15-Jul-2016 5:37 PM IST VRC கருத்துக்கள்

சந்தானம் நடித்து சமீபத்தில் வெளியான ‘தில்லுக்கு துட்டு’ நல்ல வசூலை அள்ளி வருகிறது என்று கூறப்படுகிறது. இந்த மகிழ்ச்சியில் இருக்கும் சந்தானம் அடுத்து தான் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதை ட்விட்டர் பக்கம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். இந்த படம் சம்பந்தமான கூடுதல் விவரங்களை வரும் நாட்களில் தெரிவிக்க இருப்பதாகவும் சந்தானம் குறிப்பிட்டுள்ளார். செல்வராகவன் தற்போது இயக்கி வரும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் சந்தானம் நடிக்கும் படத்தின் வேலைகள் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது. அநேகமாக வரும் செப்டம்பரில் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என்ஜிகே டீசர்


;